தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் நகர் தொகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டியுள்ள மார்க்கெட் பகுதியில் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் சபியா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மூன்றாயித்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பெண்கள் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கோஷம் எழுப்பியதோடு, தங்கள் கைகளில் உள்ள செல்போன்களில் ’டார்ச் லைட்’ அடித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.