பந்தநல்லூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் ப்ரியா(16) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் 12ஆம் வகுப்புப் பத்து வந்தார். பந்தநல்லூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் கமலேஷ்(23) ப்ரியாவைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனையடுத்து ப்ரியா கர்ப்பமுற்றார். இதனை அறிந்த ப்ரியாவின் பெற்றோர் இதுகுறித்து தங்கள் ஊர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த ஒரு வருடமாக கமலேஷை காவல்துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில், கமலேஷ் தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், கமலேஷை கைது செய்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.