தஞ்சாவூர்:தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழையால் சாலைகள், வீடுகளில் வெள்ள நீர் தேங்கி பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். ஊழியர்கள் குடியிருப்புகளில் சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
ஸ்டாலின் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துவருகிறார். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
பட்டுக்கோட்டை அருகே மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு இந்த நிலையில் ஸ்டாலின் இன்று (நவ. 14) டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்துவருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் பெரியகோட்டை பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். மேலும் அப்பகுதி விவசாயிகளைச் சந்தித்துப் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:குமரியில் கனமழை தொடரும் - ஒருசில இடங்களில் அதி கனமழை..!