தஞ்சாவூர்:கும்பகோணம் செக்காங்கண்ணி பகுதியில் உள்ள எழில் நகரை சேர்ந்தவர் மும்தாஜ் பேகம். இவரது வீட்டிற்கு குறி சொல்வதற்காக ஒரு பெண் உள்பட மூன்று பேர் சென்றுள்ளனர். அப்போது மும்தாஜ் இடம் தங்க நகைகளை வைத்து மந்திரித்தால், தங்களது பெண் திருமணம் ஆகி செல்லும் வீட்டில் வாழ்க்கை நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளனர்.
இதனை கேட்ட மும்தாஜ், ஒன்னரை சவரன் தங்க சங்கிலியை அவர்களிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிக் கொண்டு மந்திரிப்பதாக கூறிய அவர்கள், ஒரு மணி நேரத்துக்கு பின் எழுமிச்சம் பழம் மற்றும் ஒரு பொட்டலம் ஆகியவற்றை கொடுத்து 24 மணி நேரம் கழித்து பொட்டலத்தை பிரித்துப் பார்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.
அந்த பொட்டலத்துக்குள் அவர் கொடுத்த தங்க நகை இருப்பதாகவும், 24 மணி நேரம் கழித்து தான் அதனை திறக்க வேண்டும் எனவும், அப்போது தான் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளனர். இவர்கள் கூறியதை கேட்டு சந்தேகம் அடைந்த மும்தாஜ் பேகம், மந்திரித்து கொடுத்த பேப்பரை பிரித்து பார்த்த போது தங்க சங்கிலிக்கு பதில் கல் உப்பு இருந்துள்ளது.