தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செயின் பறிப்பு குற்றவாளிகளுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை! - Thanjavur district news

கும்பகோணம் அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு தலா மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செயின் பறிப்பு: குற்றவாளிகளுக்கு தலா மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை!
செயின் பறிப்பு: குற்றவாளிகளுக்கு தலா மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை!

By

Published : Dec 1, 2022, 3:10 PM IST

தஞ்சாவூர்: வலங்கைமான் வட்டம் சந்திரசேகபுரம் அருகேயுள்ள ஆதிச்ச மங்களத்தைச் சேர்ந்த மணிகண்டனின் மனைவி கனிமொழி (29). இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்னை சாலையில் கொரநாட்டுக்கருப்பூர் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த இருவர், கனிமொழி அணிந்திருந்த ஐந்து சவரன் தங்கச்செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் இது குறித்து கனிமொழி, கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல் துறையினரின் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் குத்தாலம் வட்டம் கோமல் அருகேயுள்ள கோழியூர் மணல்மேட்டு தெருவைச் சேர்ந்த சிவசங்கரன் (20) மற்றும் தாராசுரம் அருகேயுள்ள அம்மாபேட்டையைச் சேர்ந்த ஜெகதீசன் (21) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

செயின் பறிப்பில் ஈடுபட்டு தலா மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை பெறும் குற்றவாளிகள்

இந்த நிலையில் இன்று (டிச.1) நீதிபதி பாரதிதாசன், “செயின் பறிப்பில் ஈடுபட்டது தொடர்பாக கைதானவர்கள் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே குற்றவாளிகள் இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அதேநேரம் அபராத தொகையை செலுத்தத் தவறினால், மேலும் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும்” என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:அண்ணியை கண்டித்த தம்பி கொலை: ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை

ABOUT THE AUTHOR

...view details