மத்திய பட்ஜெட் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி, ஜிஎஸ்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுகுறித்து தஞ்சை மக்கள் சில வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் நல்லதுரை என்பவர் கூறுகையில், ‘தனிமனித வருமான உச்சவரம்பு, ரூபாய் 10 லட்சத்திற்கும் மேலாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும். அதற்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரி கட்ட வேண்டும் என அறிவிப்பு வெளியிட வேண்டும். 10 லட்சத்திற்கும் குறைவாக வாங்குபவர்கள் வருமான வரி கட்டும் பட்சத்தில், வாங்கும் சம்பளத்தை செலவு செய்தல் ஆகிவிடும்.
ஏக போக நெல் கொள்முதல் நிலையங்களை அரசு கொள்முதல் செய்கிறது, நாளுக்கு நாள் உரம் விலை ஏற்றம் ஆட்கூலி சம்பளம் என விலையேற்றத்தைச் சந்தித்து வரும் விவசாயிகள், விளைவிக்கும் விலைக்கே அரசு கொள்முதல் செய்கிறது. ஆனால், நாளுக்கு நாள் ஏற்படும் ஏற்றங்களை அரசு கண்டு கொள்ளவில்லை.