தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜராஜ சோழனின் 1035ஆவது சதய விழா கொண்டாட்ட நிகழ்வுகள் - தஞ்சை மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் : மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035ஆவது சதய விழாவை முன்னிட்டு பெருவுடையாருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

ராஜராஜ சோழனின் 1035 ஆவது சதய விழா கொண்டாட்டம்
ராஜராஜ சோழனின் 1035 ஆவது சதய விழா கொண்டாட்டம்

By

Published : Oct 26, 2020, 4:44 PM IST

Updated : Oct 26, 2020, 4:53 PM IST

தஞ்சையை தலைநகராகக் கொண்டு பெரும்பகுதியை ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜசோழனின் 1035ஆவது சதய விழா, பெரிய கோயிலில் மங்கல இசையுடன் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், அரசின் சார்பில் ராஜராஜன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, பெருவுடையாருக்கு 42 வகையான திவ்யக் கொடிகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பரிவட்டம் கட்டி ராஜ உடையில் அலங்காரம் செய்யப்பட்ட ராஜ ராஜ சோழனின் சிலையானது, கோயிலின் பிரகாரத்திற்கு வெளியே வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பெரிய கோயில் பெருவுடையாருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பெரும் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த சதய விழா, சிவாச்சாரியார்கள் திருமுறை பாராயணம் பாட சிறப்பாக நடைபெற்றது.

இதையும் படிங்க: காரைக்கால் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Last Updated : Oct 26, 2020, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details