தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் சட்டங்களை எதிர்த்து காவிரி மீட்புக் குழுவினர் ரயில் மறியல் போராட்டம்!

தஞ்சாவூர்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பூதலூர் காவிரி மீட்புக் குழுவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் அரைமணி நேரம் தாமதமாக சென்றது.

protst
protst

By

Published : Dec 12, 2020, 4:45 PM IST

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், தீரத்துடன் போராடும் பஞ்சாப், அரியானா விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பூதலூரில் தட்சிணாமூர்த்தி தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் பூதராய நல்லூர் தனபாலன், தென்னவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின்போது, டில்லி விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும், உழவர்களின் வாழ்வை காக்க, உழவர்களின் உரிமையை காக்க அணிதிரள்வோம். உழவர்களை ஓட்டாண்டி ஆக்கும் மோடி அரசே வேளாண் சட்டத்தை திரும்பப் பெறு என கோஷங்களை எழுப்பினர்.

காவிரி மீட்புக் குழுவினர் ரயில் மறியல்

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். ரயில் மறியலில், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸை மறித்ததால், அந்த ரயில் அரை மணி நேரம் தாமதமாக சென்றது.

இதையும் படிங்க:ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அரசியல் கட்சித் தலைவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details