தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், பள்ளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வீரமாரிமுத்து (48).
இவர், வரும் மே 27ஆம் தேதி நடைபெறவுள்ள தனது மகளின் திருமணத்திற்காக பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு முன்பணம் கொடுத்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் பள்ளத்தூருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
அதேபோல், மற்றொரு இருசக்கர வாகனத்தில் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், புக்கரம்பை 2ஆவது வார்டு திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜலெட்சுமியின் கணவர் முனியாண்டி (55) என்பவரும் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மணமேல்குடியிலிருந்து பெண், மாப்பிள்ளையுடன் திருமண சவாரி ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த ஒரு கார் கோட்டாகுடி என்ற இடத்தில் இரண்டு இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.