தஞ்சை மாவட்டத்தில் புற்றுநோய் மருத்துவர்களால் இன்று தொடங்கப்பட்ட காவிரி டெல்டா கேன்சர் சொசைட்டி சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
பேரணியை தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில், அரண்மனை தேவஸ்தான பரம்பரை இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காவிரி டெல்டா கேன்சர் சொசைட்டி சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி இந்தப் பேரணியில் மருத்துவக் கல்லூரி மாணவிகள், செவிலிய மாணவிகள் உள்பட பலர் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பிச் சென்றனர். இந்தப் பேரணியானது அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் தொடங்கி, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிறைவடைந்தது.
இதையும் படிங்க:
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி