குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் கடையடைப்புப் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள் என ஏழாயிரம் பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: குடியுரிமைத் திருத்தச் சட்டதிற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என ஏழாயிரம் பேர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
7000 people participated in caa protest
பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக, பட்டுக்கோட்டை நகர்ப் பகுதியிலுள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து மாலை மூன்று மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.