தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜனநாயகத்தைக் காப்பாற்ற சி.ஏ.ஏ.வை அரசு திரும்பப் பெற வேண்டும்' - தஞ்சாவூரில் சிஏஏ போராட்டம்

தஞ்சாவூர்: ஒருவர் ஐந்து ஆண்டுகள் வசித்துவிட்டால் அந்த நாட்டில் அவர்களுக்கு குடியுரிமை கிடைத்துவிடும் என்ற அரசியல் சட்டத்திற்கு எதிராக சி.ஏ.ஏ. உள்ளது என திமுக பேச்சாளர் புதுகை விஜயா தெரிவித்தார்.

CAA protest in tanjavur athirampatinam
CAA protest in tanjavur athirampatinam

By

Published : Mar 7, 2020, 12:46 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினத்தில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகிய சட்டங்களுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

நேற்று 17ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் திமுக பேச்சாளர் புதுகை விஜயா கலந்துகொண்டு பேசினார். அப்போது, "இந்தச் சட்டம் இந்துக்களுக்குப் பொருந்தாது இஸ்லாமியர்களுக்குத்தான் என்பது அவர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

ஒருவர் ஐந்தாண்டுகள் வசித்துவிட்டால் அந்த நாட்டில் அவர்களுக்கு குடியுரிமை கிடைத்துவிடும் என்ற அரசியல் சட்டத்திற்கு எதிராக இந்தச் சட்டம் உள்ளது. நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற இந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்றார்.

திமுக பேச்சாளர் புதுகை விஜயா

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவு கலை இலக்கியப் பிரிவு செயலாளர் பழஞ்சூர் செல்வம், நகர செயலாளர் இராம குணசேகரன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் இத்ரீஸ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க... சிஏஏ எதிர்ப்பு, ஆதரவு போராட்டம் - நேற்றைய உத்தரவை நிறுத்தி வைத்தது உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details