தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டம்: பலூன் பறக்கவிட்டுப் போராட்டம் - குடியுரிமை திருத்தச் சட்டம்

தஞ்சாவூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பட்டுக்கோட்டையில் இஸ்லாமிய பெண்கள் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டுப் போராட்டம் நடத்தினர்.

பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை

By

Published : Mar 10, 2020, 11:30 PM IST

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் இஸ்லாமியர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வடசேரி ரோடு, பெரிய பள்ளிவாசல் அருகிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக கைகளில் கறுப்பு நிற பலூன்களை ஏந்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.

பலூன்களை பறக்கவிட்டுப் போராட்டம்

பின்னர் அவர்கள் கைகளில் வைத்திருந்த பலூன்களை ஒரே நேரத்தில் பறக்க விட்டனர். பேரணியானது தபால் நிலையம் வழியாக மணிக்கூண்டு பகுதிக்கு வந்து, மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே நிறைவடைந்தது.

ABOUT THE AUTHOR

...view details