தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்மார்ட்ஃபோனுக்கு வெங்காயமா... செல்ஃபோன் கடையில் அதிரடி ஆஃபர்! - Onion Advertisement

தஞ்சாவூர்: நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு ஸ்மார்ட்ஃபோன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற செல்ஃபோன் கடையின் விளம்பரம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

buy-1-mobile-take-1-kg-onion-advertisement-which-attracted-people
buy-1-mobile-take-1-kg-onion-advertisement-which-attracted-people

By

Published : Dec 7, 2019, 10:28 AM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர் பகுதியில் மணிக்கூண்டு என்ற இடத்தில் ஒரு தனியார் மொபைல் கடை உள்ளது. இந்த கடையின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை இந்தப் பகுதியில் சென்ற அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்த விளம்பர பலகையில், ''ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்'' என்று இருந்ததுதான். இதைக்கண்ட பொதுமக்கள் சிறிது நேரம் நின்று படித்துவிட்டு செல்கின்றனர். ஒரு சிலர் ஆர்வத்துடன் உள்ளே சென்று பார்த்ததோடு மொபைல் தேவைப்படுவோர் மொபைலையும், மொபைலுடன் வெங்காயத்தையும் வாங்கிக்கொண்டுச் சென்றனர்.

மொபைல் கடையில் அதிரடி ஆஃபர்

இதுகுறித்து கடையின் உரிமையாளர் பேசுகையில், ‘வெங்காய தட்டுப்பாடு தற்போது அதிகமாக உள்ள நிலையில், எங்களின் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள மக்களின் தேவை என்ன என்று யோசித்தோம். அதன்படி ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயத்தை இலவசமாக கொடுக்க முடிவு செய்தோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுள்ளது’ என்றார்.

பட்டுக்கோட்டை பகுதியில் சிறிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ தற்போது 160 ரூபாயும், பல்லாரி வெங்காயத்தின் விலை 80 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. மேலும், இங்குள்ள பல கடைகளில் வெங்காயம் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'நான் அதிகமாக வெங்காயம் சாப்பிட மாட்டேன்' -நிர்மலா சீதாராமன்

ABOUT THE AUTHOR

...view details