உலக மக்களை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் மாவட்டத்திற்குள் 50 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்கு இரு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதில் அரசு துறை ஊழியர்கள், வங்கி பணியாளர்கள் என ஒரு பேருந்தில் 30 பேர் மட்டும் சென்றனர்.