தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டம் - காணொலி வாயிலாகப்  பேசிய மாவட்ட துணைத் தலைவர்

தஞ்சாவூர் : நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றும், இதனைத் தடுக்க சிறப்பு கிசான் காவல் படையை அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஜீவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்
விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்

By

Published : Oct 24, 2020, 2:56 PM IST

விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் பூதலூரில் இருந்து விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஜீவகுமார் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது “வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்கிறது. திருக்காட்டுப்பள்ளி அருகே வளப்பக்குடி நடுப்பகுதியில் ஆடி மாதம் வெங்காயம் அறுவடை நடைபெற்றது. அப்போது கிலோ 26 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம், தற்போது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காயத்தை இருப்பு வைத்துக்கொள்ள வசதி இல்லாததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே வளப்பகுடியில் வெங்காய கொள்முதலை அரசே ஏற்று செய்தால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். வளப்பகுடியில் வெங்காயக் கிடங்கு ஒன்று ஏற்படுத்தித் தரவேண்டும்” என்றார்.

அதேபோல், ”நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். லஞ்ச ஊழலைத் தடுக்க நடமாடும் பறக்கும் படைக்கு பதிலாக சிறப்பு கிசான் காவல் படையை அமைக்க வேண்டும். பூதலூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இவற்றில் வியாபாரிகள் முந்திக்கொண்டு நெல் போடுகின்றனர்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”மூட்டைக்கு 40 ரூபாய்க்கு மேல் பணம் பிடிக்கிறார்கள். அறுவடை காலங்களில் மட்டும் கிசான் காவல் துறையினர் அமைத்து ஊழலைத் தடுக்க வேண்டும். சம்பாவிற்கு உரத் தட்டுப்பாடு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. சம்பா பயிருக்கான பயிர் காப்பீடு குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். பிரதமரின் கிசான் திட்டத்தில் தடையில்லாமல் விவசாயிகளுக்கு தொகை வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.

இதையும் படிங்க: இன்று மகனுக்கு பயிற்சியாளர்; நளை தமிழ்நாட்டின் போட்டியாளர்!

ABOUT THE AUTHOR

...view details