தமிழ்நாடு

tamil nadu

தம்பியின் மனைவி, குழந்தைகளை காணவில்லை - அண்ணன் புகார்!

By

Published : Nov 25, 2020, 10:55 PM IST

தஞ்சை: திருவையாறு அருகே தம்பியின் மனைவி, அவரது இரண்டு குழந்தைகள் காணவில்லை என அண்ணன் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

brother-complains-that-brothers-wife-is-missing-children
brother-complains-that-brothers-wife-is-missing-children

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த விளாங்குடியைச் சேர்ந்த ரெங்கநாதன் மனைவி மணியம்மை (36). இவர் அங்குள்ள அங்கன்வாடியின் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் ரெங்கநாதன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு பிரியங்கா (17) என்ற மகளும், லோகேஸ்வரன் (7) என்ற மகனும், அட்சயா (4) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

பிரியங்கா பல்லடத்தில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்துவருகிறார். லோகேஸ்வரனும், அட்சயாவும் தாய் மணியம்மையுடன் வசித்துவருகின்றனர். மணியம்மை மகளிர் குழுவில் கடன் வாங்கி அதனைத் திரும்ப கட்டமுடியாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த நவ.20ஆம் தேதி மணியம்மை தனது குழந்தைகளுடன் வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. தம்பியின் மனைவி, குழந்தைகளைக் காணவில்லை என ரெங்கநாதனின் அண்ணன் தேவேந்திரன் (50) பல இடங்களிலும் தேடியுள்ளார்.

பின்னர் இதுசம்பந்தமாக திருவையாறு காவல் நிலையத்தில் தேவேந்திரன் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காணாமல்போன பெண், குழந்தைகளைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:அம்மா பிரியாணி உரிமையாளர் வீட்டில் திருட்டு: சிசிடிவி காட்சி வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details