தஞ்சையில் உள்ள பிடிஓ அலுவலகத்தில் புகார்தாரர் தன்னுடைய வீட்டு மனையை மனைவியின் பெயரில் மாற்றி வரைமுறைப்படுத்த கொடுத்த மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள தஞ்சாவூர் பிடிஓ அலுவலகத்தைச் சேர்ந்த தொகுதி மேம்பாட்டு அலுவலர் பாலசுப்பிரமணியன், உதவியாளர் மகாதேவ் ஆகியோர் ரூபாய் 5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டுமென வற்புறுத்தியதாகவும், அதனால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
லஞ்சம் பெற்ற அரசு அலுவலர்கள் கைது - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அலுவலகம்
தஞ்சாவூர்: வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற தொகுதி மேம்பாட்டு அலுவலர், உதவியாளர் ஆகியோரை ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் கைது செய்தனர்.
லஞ்சம் பெற்ற அலுவலர்கள் கைது!
இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தொகுதி மேம்பாட்டு அலுவலர் பாலசுப்பிரமணியன் உதவியாளர் மகாதேவ் ஆகியோர் ரூபாய் ஐந்தாயிரம் புகார்தாரரிடமிருந்து லஞ்சம் பெற்றபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர்களால் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது