தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சீனிவாசன் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் வின்சென்ட் (45). இவரது சொந்த ஊர் உத்தமபாளையம். இவர் கடந்த சில ஆண்டுகளாக பட்டுக்கோட்டையில் தங்கியிருந்து ஆழ்துளைக் கிணறு அமைக்கும் தொழில் செய்துவருகிறார்.
இந்நிலையில், நேற்று (நவ. 04) மாலை அதிராம்பட்டினம் அருகேவுள்ள முடுக்குக்காடு பகுதியில் வின்சென்ட் கை, தலை ஆகிய பகுதிகளில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார்.