தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடைத்தேர்தலில் பிஜேபி ஆதரவு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை - பொன் ராதாகிருஷ்ணன் - latest news of pon.rathakrishnan

தஞ்சை: நாங்குநேரி,விக்ரவாண்டி இடைத்தேர்தலில் பிஜேபியின் ஆதரவு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

Pon Radhakrishnan

By

Published : Sep 30, 2019, 7:49 AM IST

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள பிஜேபி கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்குச் சென்ற முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

'நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தலில் பிஜேபியின் ஆதரவு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அகில இந்திய தலைவர் வழிகாட்டுதலின் பெயரில் அது முடிவு செய்யப்படும்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பிஜேபி அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தியதின் விளைவாக அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்துள்ளது. அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி தமிழ் மொழியைப் பெருமைப்படுத்தியுள்ளார், அதற்காக பிரதமர் மோடிக்கு சட்டசபையில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

மேலும் அவர், பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, பொருளாதாரத்தில் எப்பொழுதும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும்' இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க:

நாம் தமிழர் வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details