தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை மாணவி தற்கொலையில் பாஜக அரசியல் செய்கிறது: கே.எஸ்.அழகிரி - தஞ்சை மாணவி தற்கொலை

தஞ்சையில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், பாஜக அரசியல் செய்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

By

Published : Jan 25, 2022, 7:37 PM IST

சென்னை:சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "மோடியின் ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 விழுக்காடு குறைந்துள்ளது. பணக்காரர்களின் வருமானம் 39 விழுக்காடு உயர்ந்து இருக்கிறது என்று மும்பையில் உள்ள பொருளாதார ஆய்வு மையம் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

இந்த ஆய்வு அறிக்கை உலகம் முழுவதும் பவனி வருகிறது. தற்போது, நூல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இல்லை.

சரியான பொருளாதாரம், தொழில் கொள்கை இல்லாததே இந்த நிலைக்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி. அவர் சர்தார் வல்லபாய் படேல் புகழை பாடினார். தற்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புகழை பாடுகிறார்.

சர்தார் வல்லபாய் படேல்

குஜராத் மாநிலம் என்றால் மகாத்மா காந்தி தான். ஆனால் அங்கு சர்தார் வல்லபாய் படேல் சிலையை கொண்டு போய் வைத்தனர். எதற்காக என்றால் அங்கு மகாத்மா காந்தியை குஜராத் மாநிலத்தில் பேசக்கூடாது என்பதற்காக தான். காங்கிரஸ் கட்சி பொறுத்தவரை பட்டேல், நேதாஜி ஆகியோரை விரும்புகிறது. பாஜகவினர் இழிவான அரசியலில் இருந்து வெளியே வரவேண்டும். கடவுள் அவர்களுக்கு அருள்புரிய வேண்டும்.

மோடி அரசாங்கம் ஐஏஎஸ் அலுவலர்களின் பணியில் திருத்தம் செய்ய இருக்கிறார்கள். இது மாநிலத்தின் உரிமையில் விழுகிற அடி. இந்த விவகாரத்தில், தமிழ்நாடு அரசுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.

கூட்டு குடிநீர் திட்டம்

ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, கர்நாடகம் எதிர்ப்பது தெரிவிப்பது ஏற்புடையதில்லை. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு காங்கிரஸ் துணை நிற்கும். தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை, இலங்கை அரசு ஏலம் விடுகிறது. மீனவர்களை கைது செய்கிறார்கள். ஒன்றிய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கண்டும் காணாமல் இருக்கக்கூடாது.

தஞ்சையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதமாற்றம் செய்ய சொன்னதால் மாணவி தற்போது தற்கொலை செய்ததாக சொல்கிறார்கள். அரசியல் செய்வதற்கு எதுவுமே இல்லை என்பதால், மாணவியின் தற்கொலை விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளனர். தமிழ்நாட்டில், மாணவி தற்கொலை விவகாரம் குறித்து, பாஜக உண்ணாவிரதம் செய்வது அரசியல் நோக்கம்.

நீட் தேர்வு வேண்டாம்

நீட் தேர்வில், சிபிஎஸ்இ மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுகிறார்கள். நீட் விவகாரத்தில், காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது. நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு வேண்டாம். கோவையில் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி படத்தை பலவந்தமாக வைக்கிறார்கள். காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுகவிடம் அதிக இடங்களை கேட்டு பெறுவோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்க, வருகிற ஜனவரி 28 ஆம் தேதி செயற்குழு கூட்டம் கூடுகிறது. மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தரமற்ற உணவு வழங்கினால் உணவகங்களின் ஒப்பந்தங்கள் ரத்து - அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்

ABOUT THE AUTHOR

...view details