இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் முள்ளி வாய்க்கால் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டனர்.
'விடுதலைப் புலிகளுக்கு காங்கிரஸ் செய்ததையே பாஜகவும் செய்கிறது' - பழ. நெடுமாறன் - பழ நெடுமாறன்
தஞ்சாவூர்: "விடுதலைப் புலிகளின் விவகாரத்தில் காங்கிரஸ் செய்ததையே, பாஜகவும் செய்து வருகிறது" என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், அந்த தினத்தை அனுசரிக்கும் விதத்தில் தமிழ்நாடு முழுவதும் மே 18 முள்ளி வாய்க்கால் நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், தஞ்சாவூர் விளார் சாலையில் அமைக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பழ நெடுமாறன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகளில் மெழுகு தீபம் ஏந்தி 'மே18 தினத்தை' அனுசரித்து படுகொலை செய்யப்படத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்திய அரசு, மேலும் ஐந்து ஆண்டுகள் தடை விதித்திருப்பது காங்கிரஸ் அரசு செய்தது. அதனையே தற்போது பாஜக அரசும் செய்வதுள்ளது. இலங்கையில் தமிழர்கள் இந்துவாக இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும் அவர்களைத் தமிழர்களாகப் பார்த்து அழிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு அதையே காட்டுகிறது", என்றார்.