தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகரில் நேற்றிரவு விநாயகர் விஜர்சன ஊர்வலம் கோலாகமாக தொடங்கியது. இந்த ஊர்வலம் சிறிது தூரத்திலேயே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனை கண்டித்து தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சதீஷ்குமார் தலைமையிலான பாஜகவினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில், இந்த ஊர்வலம் சாரங்கபாணி தெற்கு வீதி வழியாக செல்கிறது. அந்த நேரத்தில் அங்குள்ள பெரிய பள்ளிவாசலில் இறைவழிபாடு நடக்கும். அதனால் சிறிது நேரம் கழித்து புறப்படுமாறு தெரிவிக்கப்பட்டது.
விநாயகர் விஜர்சன ஊர்வலத்தில் பாஜகவினர் சாலைமறியல் இதனையேற்ற பாஜகவினர் 07.15 மணிக்கு மீண்டும் ஊர்வலத்தை தொடங்கினர். இந்த ஊர்வலம் தலைமை அஞ்சலக சாலை, நாகேஸ்வரன் வடக்கு, உச்சிபிள்ளையார் கோயில், என முக்கிய வீதிகள் வழியாக காவிரி ஆற்றின் பழைய பாலக்கரை வரை சென்று கரைக்கப்பட்டன.
அப்போது தஞ்சை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் தலைமையில் ஐந்து டிஎஸ்பிகள், பத்து காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், ஆயுதப்படை போலீசார், ஊர்காவல் படையினர் என 375-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: களைகட்டிய மொய் விருந்து... ரூ. 11 கோடி வசூல்