தஞ்சாவூர்:தமிழர்கள் வழக்கமாக வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை தனது குடும்பத்தில் ஒருவராக நினைத்து வளர்ப்பார்கள். அதன்படி தஞ்சையில் பாத்திமா நகரைச் சேர்ந்த சதீஷ் என்பவர், தான் வளர்த்த பசு மாட்டிற்கு ‘அம்சி’ என பெயர் வைத்து ஆசையாக வளர்த்து வந்துள்ளார்.
பசுவுக்கு முதல் பிறந்தநாள்.. கேக் வெட்டி கொண்டாடிய பாசக்கார குடும்பம்! - thanjavur trending news
தஞ்சாவூரில் உள்ள ஒரு குடும்பத்தினர், அம்சி என்ற பசுக்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.
’அம்சி’ பசுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்..
இந்த அம்சி பசு பிறந்து இன்றுடன் (நவ.27) ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில், தனது குடும்பத்துடன் சேர்ந்து பசு மாட்டிற்கு அலங்கார குல்லா அணிவித்து முதலாம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். அதிலும் அம்சி பசுவின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆண், பெண் குணாதிசயங்களுடன் பிறந்த அதிசய கன்று.. காணக் குவியும் மக்கள் கூட்டம்!