தஞ்சாவூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் 39 ஏக்கர் பரப்பளவில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மருத்துவமனையான ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனை வளாகத்தில், மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட பின், மகப்பேறு, சித்த மருத்துவம், கண் சிகிச்சை, காசநோய் ஆகிய பிரிவுகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் அதிக அளவு பிரசவம் நடைபெறும் மருத்துவமனைகளில் இந்த மருத்துவமனையும் ஒன்றாகும். ஆண்டுக்கு 1.25 லட்சம் குழந்தைகள் இம்மருத்துவமனையில் பிறக்கின்றனர். தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இம்மருத்துவமனையை அதிகம் அணுகி வருகின்றனர்.