தஞ்சாவூர் மாவட்டம் மாதாகோட்டை சாலை பேங்க் ஸ்டாப் காலனியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது பல்சர் பைக் திருடப்பட்டுள்ளது. காலையில் பைக் திருடப்பட்டிருப்பதை அறிந்த வீட்டார், வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை சோதனையிட்ட போது இரண்டு நபர்கள் பைக்கை திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி பைக் கொள்ளை: சிசிடிவி காட்சிகள் - தமிழ்நாட்டில் கரோனா
தஞ்சை: மாதாகோட்டை சாலையில் ஊரடங்கு உத்தரவை சாதகமாகப் பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை திருடும் கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
bike-robbery-taking-advantage
அதையடுத்து அவர்கள் அந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். அத்துடன் பேங்க் ஸ்டாப் காலனியில் மட்டுமல்லாமல் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஈ.பி. காலனி, புதிய வீட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளிலும் பல பைக் திருட்டுக்கள் நடந்திருப்பதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கத்தியுடன் பைக்கில் சுற்றிய நபர் - காவல்துறையினர் விசாரணை!