தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மதுக்கூர் பிரிவு சாலையில் துணை ஆய்வாளர் முத்து குமார் தலைமையிலான காவல்துறையினர் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைக் காவல் துறையினர் மடக்கி விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததில் சந்தேகமடைந்த முத்து குமார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றார்.
அங்கு அவர்களிடம் காவல் துறைக்கே உரிய பாணியில் விசாரித்ததில், ஒருவர் நம்பிவாயல் உதயநிதி (27), மற்றொருவர் அவரது மைத்துனரும் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவருமான வீரபெருமாள் (35) என்பது தெரியவந்தது, இவர்கள் இருவரும் கூட்டாகச் சேர்ந்து பாப்பாநாடு பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடி வந்ததும் தெரியவந்தது.