தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊழியருக்கு கரோனா- தற்காலிகமாக மூடப்பட்ட வங்கி! - தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர்: அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், அந்த வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தற்காலிகமாக மூடப்பட்ட வங்கி
தற்காலிகமாக மூடப்பட்ட வங்கி

By

Published : Jul 25, 2020, 1:15 PM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதற்கிடையே, அம்மாவட்டத்திலுள்ள வங்கிகளில் முறையாகத் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வதால், வங்கி ஊழியர்களுக்கு தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் கிளையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details