தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆபாச பேச்சு, நிர்வாண வீடியோ கால், உல்லாசம்: மன்மத லீலையில் திளைத்த வங்கி காசாளருக்கு வலைவீச்சு! - Edwin Jayakumar

தஞ்சாவூர்: பல பெண்களுடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் திளைத்த அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றின் கேசியர் (காசாளர்), தன்னைக் கண்டித்த மனைவியை கொலைசெய்ய துணிந்ததால் அவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

cashier
cashier

By

Published : Feb 19, 2020, 7:00 PM IST

Updated : Feb 19, 2020, 8:32 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த லூயிஸ்விக்டர் என்பவரது மகன் எட்வின் ஜெயக்குமார் (36). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் காசாளராகப் பணியாற்றிவருகிறார்.

இவருக்கும் தஞ்சையைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணிற்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமானதிலிருந்தே, எட்வின் ஜெயக்குமார் தனது மனைவியிடம் நெருக்கம் இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

எட்வின் ஜெயக்குமார்

ஆபாச பேச்சு

பணிக்குச் சென்று இரவு வீட்டிற்குத் தாமதமாகவே வருவது, தனி அறைக்குச் சென்று 15 செல்லிடப்பேசிகளை வைத்துக்கொண்டு பல பெண்களுக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியவாறு இருந்துவந்தார். இதனால் சந்தேகமடைந்த இவரது மனைவி, எட்வின் ஜெயக்குமாரிடம் 'யாருடன் செல்லிடப்பேசியில் ஆபாசமாகப் பேசுகிறீர்கள்?' எனக் கேட்டதற்கு அவரைக் கடுமையாகத் தாக்கினார்.

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஒருநாள் இரவு எட்வின் ஜெயக்குமார் தூங்கிய பின்பு அவரின் செல்லிடப்பேசிகளை எடுத்து பார்த்த அவரது மனைவி அதில் உள்ள ஆபாசக் காட்சிகளைக் கண்டு அதிர்ந்துபோனார்.

உல்லாச காணொலிகள்!

அதில் பல பெண்களுடன் எட்வின் ஜெயக்குமார் உல்லாசத்தில் ஈடுபட்ட காணொலிகள், ஏராளமான பெண்களை அவர்களுக்குத் தெரியாமலேயே ஆபாச புகைப்படங்கள், காணொலிகள் எடுத்து வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பல பெண்களுடன் எட்வின் ஜெயக்குமார் உல்லாசம்

மேலும் செல்லிடப்பேசியில் அவர் பணியாற்றும் வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்கள் பலரின் வங்கிக் கணக்குப் புத்தகமும் அவர்களது புகைப்படங்களும் இருந்தன. எட்வின் ஜெயக்குமார் மன்மத லீலைக்கு துணையாக, அதே வங்கியில் பணியாற்றும் சக பெண் ஊழியர் ஒருவரும் உடந்தையாக இருந்ததையும் அவரது மனைவி தெரிந்துகொண்டார்.

குளியலறையில் நிர்வாணப் பேச்சு

அதுமட்டுமின்றி வீட்டில் உள்ள குளியலறைக்குச் சென்று நிர்வாணமாகப் பல பெண்களுடன் காணொலி அழைப்பு (வீடியோ கால்) முறையில் ஆபாசமாகப் பேசிய வீடியோக்களும் செல்லிடப்பேசியில் இருந்தன.

மற்றொரு செல்லிடப்பேசியில் எட்வின் ஜெயக்குமாரின் தாயும், அவரது உறவுக்காரப் பெண் ஒருவரும் தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்ட காணொலி இருந்ததைப் பார்த்து, எட்வினின் மனைவி கடும் அதிர்ச்சியடைந்தார்.

குளியலறையில் நிர்வாணமாக வீடியோ கால் பேசும் எட்வின் ஜெயக்குமார்

இது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு 'இது குறித்து வெளியில் தெரிவித்தால் உன்னைக் கொலை செய்துவிடுவேன்' என அவரது மனைவியை எட்வின் மிரட்டியுள்ளார்.

இதுமட்டுமின்றி எட்வினுடன் பணிபுரியும் சக பெண் ஊழியரும் 'உன்னை ஆபாசமாகக் காணொலி எடுத்துவைத்துள்ளோம். எங்களைப் பற்றி வெளியில் சொன்னால் உன் ஆபாசக் காணொலியை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவோம்' என அவரும் எட்வின் மனைவியை மிரட்டியுள்ளார்.

மனைவியைக் கொலைசெய்ய முயற்சி

இதனிடையே தேவாலயத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஆள் நடமாட்டம் இல்லாத மலையேரிப்பட்டிக்குத் தனது மனைவியை எட்வின் ஜெயக்குமார் கட்டாயப்படுத்தி கூட்டிச்சென்றார்.

இதில் பயந்துபோன அவர் தனது கணவரிடம் இருந்து தப்பிச் சென்று, இது குறித்து தஞ்சை டிஐஜி லோகநாதனிடம் புகார் அளித்துள்ளார்.

5 பேர் மீது வழக்குப்பதிவு

இதனைத்தொடர்ந்து டிஐஜி உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் விசாரணை நடத்தி எட்வின் ஜெயக்குமாரின் வீட்டில் அவர் பயன்படுத்திய 15 செல்லிடப்பேசிகளைப் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, எட்வின் ஜெயக்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

எட்வின் ஜெயக்குமார்

எட்வின் தலைமறைவு

இதனிடையே மனைவி புகார் அளித்ததை அறிந்த எட்வின் ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்பிணை பெற்றார். இந்த நிலையில், எட்வின் ஜெயக்குமாரின் மனைவி தனது கணவர் வைத்திருந்த ஆபாசக் காணொலி, புகைப்படங்களை மதுரை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல் துறையினர் எட்வின் ஜெயக்குமார் மீது பிணையில் வெளிவரமுடியாத, மேலும் இரண்டு வழக்குகளை பதிவுசெய்தனர்.

தற்போது, தலைமறைவாக இருக்கும் வங்கி காசாளர் எட்வின் ஜெயக்குமாரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: வேறொரு பெண்ணுடன் தொடர்பு: கணவனின் பிறப்புறுப்பைத் துண்டித்துக் கொன்ற மனைவி!

Last Updated : Feb 19, 2020, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details