அயோத்தி வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் எனத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இஸ்லாமியர்களுக்கு தனியாக மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளையை உருவாக்கிய மத்திய அரசு, கோயில் கட்டும் பணியை ஒப்படைத்தது. இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிச் செங்கல்லை எடுத்துவைத்து அடிக்கல் நாட்டினார்.
இச்சூழலில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், அயோத்தில் விரைவில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி தென்னக அயோத்தி என்று போற்றப்படும் ராமசாமி கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டது. அங்குள்ள ராமர் சிலைக்கு இந்து மக்கள் கட்சியினர் புனித நீரைக் கொண்டு அபிஷேகம் செய்து, வழிபாடு நடத்தினர். மாநிலச் செயலாளர் பாலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்.
இதையும் படிங்க:ராமர் கோயிலை விரைவாகக் கட்ட வேண்டி புதுச்சேரியில் பூஜை
.