தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாரம்பரிய சின்னங்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தஞ்சையில் விழிப்புணர்வுப் பேரணி! - Awareness rally in Tanjore emphasizing the protection of traditional symbols

தஞ்சை : பாரம்பரிய சின்னங்களின் வரலாறுகளை அடுத்த இளம் தலைமுறைக்கு கொண்டுசேர்க்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக தொல்லியல் துறை திருச்சி வட்ட கண்காணிப்பாளர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

பாரம்பரிய சின்னங்களின் வரலாறுகளை அடுத்த இளம்தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்!
பாரம்பரிய சின்னங்களின் வரலாறுகளை அடுத்த இளம்தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்!

By

Published : Nov 19, 2020, 9:09 PM IST

உலக பாரம்பரிய சின்னம் வாரம் நவம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை கொண்டாடப்படுவது வழக்கம்.

அதனை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் இருந்து பாரம்பரிய சின்னங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பேரணி இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், திருச்சி வட்ட கண்காணிப்பாளர் அருண்ராஜ் இருவரும் இணைந்து கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல்லியல்துறை திருச்சி வட்ட கண்காணிப்பாளர் அருண்ராஜ், "பாரம்பரிய சின்னங்களை ஒவ்வொருவரும் தங்களுடைய பாரம்பரிய சின்னமாக நினைத்து பாதுகாக்க வேண்டும். பாரம்பரியச் சின்னங்களின் வரலாறுகளையும், அதன் சிறப்புகளையும் தெரிந்துகொண்டு, அடுத்த இளம் தலைமுறைக்கு கொண்டுசெல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

சிலை கடத்தல் என்பது இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவில் பெரும் சவாலாக உள்ளது. கடத்தப்பட்ட சிலைகள் தொடர்ந்து மீட்கப்பட்டுவருகின்றன. இன்னும் உலக அளவில் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பல சிலைகள் மீட்கப்பட வேண்டிய நிலை உள்ளது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு என்பது சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது" எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details