தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் பெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்...! - auto rickshaw symbol

தஞ்சாவூர்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் என்.ஆர் நடராஜனுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

என்.ஆர் நடராஜன்

By

Published : Mar 29, 2019, 10:22 PM IST

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் இன்று வேட்பாளர்களுக்குச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்நிலையில் தஞ்சாவூரில் அதிமுக கூட்டணியின் சார்பாக போட்டியிடும் என்.ஆர் நடராஜனுக்கு தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் சைக்கிள் சின்னம் வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மேல் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டால்தான் சைக்கிள் சின்னம் பெற முடியும். ஆகவே ஒரே ஒரு தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதால் தமிழ் மாநில காங்கிரசுக்கு சைக்கிள் சின்னம் கிடையாது என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது

இதனையடுத்து இன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர் நடராஜனுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details