தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பாணாதுறை தெற்கு வீதி சந்திப்பில் உள்ள பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையத்தில் நேற்று முன்தினம் (மே 13) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே புகுந்து கேமராக்களை சேதப்படுத்தி ஒயர்களை துண்டித்து ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.
அப்போது, ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது குறித்து அருகில் உள்ள மளிகை கடைவைத்திருக்கும் ஒருவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.