தஞ்சாவூர்:தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதியம் 12 மணிக்கு வருவதாகத் தகவல் தெரிவித்திருந்தனர். அந்த நிலையில் அமைச்சர் வருவதற்காக ஸ்கேட்டிங் மாணவ, மாணவிகள் காலையிலேயே வந்து காத்திருந்தனர். ஆனால் உதயநிதி ஸ்டாலின் மதியம் 2.30 மணியளவில் பொறுமையாக்கக் காலதாமதமாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அதுவரை சுட்டெரிக்கும் வெயிலில் ஸ்கேட்டிங் மாணவ மற்றும் மாணவிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.
அதில் பல மாணவ, மாணவிகள் சோர்ந்து போய் மைதானத்திலேயே உட்கார்ந்து இருந்தனர். ஆனால் ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானத்தில் கல்வெட்டு திறப்பதற்காக அவசர அவசரமாக தற்காலிக கல்வெட்டு ஒட்டப்பட்டது. அதனைத் தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கல்வெட்டு ஒட்டும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தார். மேலும் தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க மாவட்ட கழகம் சார்பில் நகரம் முழுவதும் விளம்பர ப்ளக்ஸ், இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட 10 அடி உயரத்திற்கான கொடிகள் ஆகியவை ஆங்காங்கே கட்டப்பட்டிருந்தன.