தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவடி வரையிலான கிழக்கு கடற்கரை சாலைப் (ஈசிஆர்) பகுதியில் இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இப்பகுதியில் விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இரவு நேரங்களில் மாடு வளர்ப்போர் மாடுகளை முறையாக வீட்டில் கட்டிவைத்து பராமரிக்காமல் சாலைகளில் விட்டுவிடுவதால் அந்த மாடுகள் அப்பகுதியில் சுற்றித்திரிகிறது.
மேலும் கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் கொட்டும் உணவு பண்டங்களை உண்பதற்காக சுற்றுவட்டாரத்தில் உள்ள அத்தனை கிராமத்து மாடுகளும் வந்து விடுகின்றன.
தூத்துக்குடி முதல் சென்னை வரை செல்லும் இந்த முக்கிய சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து வாகனங்களால் நிறைந்து காணப்படும் என்பதால் இரவு நேரங்களில் கண்விழித்து வாகனங்களை ஓட்டிவரும் ஓட்டுநர்களுக்கு சாலையில் மாடுகள் நிற்பதே தெரியாமல் போய்விடுகிறது அதுவும் குறிப்பாக கருப்பு நிற மாடுகள் நிற்பதால் சாலையில் மாடு எங்க நிற்கிறது என்று தெரியாமல் விபத்து ஏற்படுகிறது.
cows nigh walks in ecr roads சாலையில் திடீரென மாடுகளை கண்ட ஓட்டுநர்கள் அந்த நேரத்தில் வாகனத்தை கட்டுப்படுத்தும் போது வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. இதனால் கிட்டத்தட்ட அதிராம்பட்டினம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்குள் சாலை விபத்தில் 30க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மாடுகளை முறையாகப் பராமரிக்க கால்நடை வளர்ப்போருக்கு அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் படிக்க:இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிப்பு!