தஞ்சை மாவட்டம், தோகூரில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் கருணாகரன் வயது (56). இவர் கடந்த 36 ஆண்டுகளாக காவலராக பணிபுரிந்து தற்போது, காவல்துறை உதவி ஆய்வாளராக தோகூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி அன்று இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.