தஞ்சாவூர்:உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜப் பெருமான், சிவகாமி அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மங்கள வாத்தியங்களுடன் ராஜவீதிகளில் வலம் வந்தனர். சிவகங்கை குளத்தில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.
பின்னர், சுவாமிகள் தஞ்சைப்பெரிய கோயிலுக்கு வந்து அங்கு அம்பாள் கோயிலுக்கு உள்ளே நுழைந்து கதவை சாத்திக்கொண்டு நடராஜப் பெருமான் மீது கோபித்து கொண்டு உள்ளே வரவிடாமல் தடுத்து விடுகிறார். இதனையடுத்து சுந்தரர் இரு தரப்பிலும் சமாதானம் செய்து சுவாமியை கோயிலுக்குள் அழைத்து வரும் புராணக் கதையின் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.