திருவையாறு அடுத்த வைத்தியநாதன்பேட்டையைச் சேர்ந்த மூக்கையன் என்பவரின் மகன் மகாராஜன்(32). அதே ஊரைச் சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் சங்கர்(28). இவர்கள் இருவரும் வைத்தியநாதன்பேட்டையில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கூலி வேலை செய்துவருகின்றனர்.
சம்பவத்தன்று சங்கர் குடிபோதையில் மகாராஜனின் மனைவி இலக்கியாவை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். அதை இலக்கியா, தன் கணவர் மகாராஜனிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக மகாராஜன் சங்கரிடம் கேட்டபோது, வாய்த் தகராறு ஏற்பட்டு சங்கர் மகாராஜனின் கைவிரலை கடித்து காயப்படுத்திவிட்டார்.