தஞ்சாவூர் மாவாட்டம், அதிராம்பட்டினம் அருகில் கொள்ளுக்காடு ஊராட்சி உள்ளது. இந்தப் பகுதியில் விவசாயிகள், மீனவர்கள் எனப் பல தரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு அறிவித்த ஊரடங்குச் சட்டத்தை முறையாக பின்பற்றி வருவதோடு, இங்குள்ள மக்கள் சமூக விலகலை முறையாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்படும் ஊராட்சி - அலுவலர்கள் பாராட்டு - கொள்ளுக்காடு ஊராட்சிக்கு அலுவலர்கள் பாராட்டு
தஞ்சாவூர்: கரோனா நோய்த் தடுப்பில் சிறப்பாக செயல்படும் கொள்ளுக்காடு ஊராட்சிக்கு அலுவலர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த ஊராட்சி நிர்வாகம் தூய்மைப் பணி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆரம்ப நாள் முதலே மிகச் சிறப்பாக செய்து வந்தது. இதை அறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரமேஷ், துணை ஆணையர் கண்ணன் ஆகியோர் கொள்ளுக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா சாமியப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுனில் அமலன், உறுப்பினர்கள் ஆகியோர்களை பாராட்டினர்.
அலுவலர்களின் இந்தப் பாராட்டு எங்களுக்கும் சிறந்த ஊக்கம் அளிக்கிறது. அரசு எப்பொழுதும் ஊரடங்கை விளக்கிக் கொள்ளச் சொல்கிறதோ... அதுவரை நாங்கள் கட்டுப்பாடுடன் இருப்போம் என்று இந்த ஊராட்சி மக்கள் தெரிவிக்கின்றனர்.