குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது முதல் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிஏஏவுக்கு எதிராக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஜமாத் கூட்டமைப்பினர் சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
சிஏஏவுக்கு எதிராக மனிதச் சங்கலிப் போராட்டம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும், இந்தப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: ‘தமிழ்நாட்டில் சிறுமிகள், தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை’ - திருமா குற்றச்சாட்டு