கடந்த 15 நாள்களாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மத்திய அரசின் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றை எதிர்த்து பெரிய பள்ளிவாசல் அருகில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பேரணியாகச் சென்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச் சிலையிடம் மனு கொடுக்கச் சென்றனர். இதையடுத்து காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அங்கிருந்து அவர்களைக் கலைந்து போகச் சொல்லி காவல் துறையினர் அறிவுறுத்தினர். சமாதானம் அடையாத பெண்கள் ஜெயலலிதாவின் சிலைக்கு அருகே மீண்டும் செல்ல முயன்றனர்.