கரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பாதுகாப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு, கிருமி நாசினி தெளிக்கும் உபகரணங்களை, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சேகர் வழங்கினார்.
கரோனா பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் விதத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுக்கூர் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து இந்த உபகரணங்களை ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் அவர் வழங்கினார்.