குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் 44ஆவது பேரவை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள் சர்க்கரைத் துறை நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 30 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும்; ஆலையை மூடக் கூடிய வகையில் பணி செய்யக்கூடிய பணியாளர்களை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.