தஞ்சாவூர்: கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிவித்து சபரிமலை செல்வது வழக்கம், அதற்கு முன்னதாக பல்வேறு இடங்களில் பூஜைகள் செய்து வழிபாடும் செய்து அன்னதானமும் ஐயப்ப பக்தர்கள் செய்வர்.
இந்நிலையில் தஞ்சையில் அமைந்துள்ள ஸ்ரீ தான்தோன்றி அம்மன் ஆலயத்தில் ஐயப்பன் பரிவார தெய்வமாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இதனையடுத்து ஐயப்பனுக்கு இன்று (டிச.18) முப்பதாம் ஆண்டு மணிவிழா பூஜையை முன்னிட்டு 1008 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து அபிஷேகம் நடைப்பெற்றது.