தஞ்சாவூர்: விரைவில் அமைச்சராக பொறுப்பேற்க உள்ள சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று (டிச.12) மாலை கும்பகோணம் மாநகர திமுக சார்பில் நடைபெற்றது.
கும்பகோணம் மூர்த்தி கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏழை எளியோர் 500 பேருக்கு எவர்சில்வர் குடங்கள் வழங்கும் விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மாநகரச் செயலாளரும், மாநகர துணை மேயருமான சு.ப.தமிழழகன் வரவேற்புரை ஆற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “கேக் வெட்டி கொண்டாடினால் அது பர்த்டே பார்ட்டி. நாக்கை வெட்டி கொண்டாடினால் அது பாரதிய ஜனதா பார்ட்டி.
திமுக 73 ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவிற்கும் புத்துணர்ச்சியுடனும், எழுச்சியுடனும் இருப்பதற்குக் காரணம், கட்சியில் புதியதாக உருவாக்கப்பட்ட இரண்டு அணிகள் உள்பட 22 அணிகள் தான்.