தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுச்சுவர் பள்ளத்தில் சிக்கிய பழங்கால நடராஜர் சிலை - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்

தஞ்சை: அதிராம்பட்டினம் அருகே சுற்றுச்சுவர் எழுப்ப தோண்டப்பட்ட பள்ளத்தில் பழங்கால ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

thanjai

By

Published : Sep 18, 2019, 3:10 PM IST

தஞ்சை அதிராம்பட்டினம் அருகிலுள்ள வள்ளிகொல்லைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது வீட்டின் பின்புறம் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபொழுது, உலோகப்பொருள் ஒன்று தென்பட்டுள்ளது. பின்னர் முழுமையாக தோண்டியபின் பழங்கால ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் முருகானந்தம், இது குறித்து வருவாய்த் துறையினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு விரைந்த, வருவாய்த் துறையினர் ஐந்தடி உயரமும் 500 எடையும் கொண்ட ஐம்பொன் நடராஜர் சிலையை கைப்பற்றினர்.

மேலும் அங்கு சிலைகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என எண்ணி அதனை உறுதி செய்ய பொக்லைன் இயந்திரம் மூலம் ஆய்வுப் பணியை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று இரவு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலர் பொன். மாணிக்கவேல், காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் மலைச்சாமி உள்ளிட்ட சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சிலையை பார்வையிட்டதோடு மேலும் சிலைகள் உள்ளனவா என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ள வரதீஸ்வரர் திருக்கோயில்

மேலும் கைப்பற்றப்பட்ட சிலை அதிராம்பட்டினம், வரதீஸ்வரர் திருக்கோயில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது என சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details