தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முன்னாள் முதலமைச்சர் ஜெய லலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் அமமுக துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கழகத் தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
'2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பதே இலக்கு' - AMMK additional secretary rengasamy
தஞ்சாவூர்: அமமுகவின் இலக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று, ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் அமைப்பதே ஆகும் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ரெங்கசாமி கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமமுக துணைப் பொதுச்செயலாளர் ரெங்கசாமி பேசுகையில், 'மறைந்த அதிமுக தலைவர் ஜெயலலிதா, கழகத்தை கண்ணை இமை காப்பதைப்போல பாதுகாத்தார். அதேபோல அப்படி ஒரு ஆளுமை மிக்க தலைமையின் கீழ், அதிமுக மீண்டும் வர வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே கழகத் தொண்டர்களும் மாற்றுக் கட்சியினரும் அமமுகவில் இணைந்துள்ளார்கள். நமது இலக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று, ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைப்போம்' என்றார்.
இதையும் படிங்க:‘அரசின் மானியத்தொகை உண்மையான பயனாளிகளைச் சென்றடைவதில்லை’ - ஆரணி எம்பி குற்றச்சாட்டு