தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கிய அமெரிக்கவாழ் இந்தியர்கள்! - american lives indian provided coconut plant in pattukottai

தஞ்சாவூர்: பட்டுகோட்டை அருகே அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் உருவாக்கியுள்ள நீருற்று என்ற அமைப்பின் மூலம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

coconut plant

By

Published : Nov 24, 2019, 2:18 AM IST

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் நீரூற்று என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் மூலம் கஜா புயல் பாதித்த பகுதிகளில் இழந்த இயற்கையை மீட்டெடுக்கும் நோக்கத்தோடு தென்னங்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.

அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வெட்டுவாகோட்டை கிராமத்தைச் சேர்ந்த நாதன் என்பவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில், நாதனின் முயற்சியால், நீருற்று அமைப்பினர் முதற்கட்டமாக வெட்டுவாகோட்டை ஊராட்சியில் உள்ள விவசாயிகளுக்கு ஆயிரம் தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கினர்.

விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நீருற்று அமைப்பினர்

அப்போது, நாதனின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், இப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து நீருற்று அமைப்பின் மூலம் வழங்க இருப்பதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

கஜா கடந்து ஓராண்டு முடிந்தது.... மீண்டதா சோழநாடு?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details