மனிதன் தன் வாழ் நாளினை நீட்டி கொள்ள ஆங்கில மருத்துவத்தை நாடுவதை விட சமீபகாலமாக இயற்கை மருத்துவத்தில் தனது நாட்டத்தையும் விருப்பத்தையும் அதிகப்படுத்திக் கொள்ளும் நிலை தொடர்ந்து வருகிறது.
அந்தவகையில் எதிர்வரும் கோடைகாலத்தை சமாளிக்க மனிதனின் உடல் சூடு உஷ்ணம் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் விதமாக இயற்கையை தேட தொடங்க ஆரம்பிக்கும் நேரத்தில் தஞ்சையில் களமிறக்கப்பட்டார் கற்றாழை ஜூஸ் விற்பனை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தஞ்சையில் பெரியகோயில், சிவகங்கை பூங்கா ,அரண்மனை வளாகம், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கற்றாழை ஜூஸ் விற்பனை பொதுமக்களின் ஆதரவைப் பெற்று உடல் குளிர்ச்சியை தக்க வைக்கும் விதமாக விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
தஞ்சையில் களைகட்டிய கற்றாழை ஜூஸ் இக்கற்றாழை வகைகள் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மைசூர் பெங்களூர் போன்ற பெருநகரங்களில் இருந்தும் ஏற்றுமதி செய்யப்பட்டு தஞ்சையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: 'தவிக்கும் வாய் அறியும் தண்ணீரின் தேவையை...'