தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவடி வரையில் மீன்வர்கள் அதக அளவில் வாழ்ந்து வருகின்றனர். 45 கிலோமீட்டர் தூரம் கடல் எல்லை உள்ள இப்பகுதியில், 37 மீன்பிடித் தளங்கள், 300 விசைப்படகுகள்,1500 நாட்டுப் படகுகளுடன் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர்.
கரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவது மட்டுமின்றி, மீன்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது.